பெட்ரோல் போட்ட பாவத்துக்கு - Bunkஐயே இழுத்து மூட வைத்த ராசிக்காரர்
மத்திய பிரதேசத்தில் பால் கேன் மூடியை ஹெல்மெட்டாக அணிந்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு பெட்ரோல் வழங்க இந்தோர் மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பால்டா பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பால் கேன் மூடியை ஹெல்மெட்டை போல அணிந்து வந்துள்ளார். இதனை பொருட்படுத்தாத பெண் ஊழியர் ஒருவர் அந்த நபருக்கு பெட்ரோல் வழங்கியுள்ளார். இதனால் அதிகாரிகள் பெட்ரோல் நிலையத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
Next Story
