காரில் ஏறி அமர்ந்த SI-க்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்
காருக்குள் ஏறி அமர்ந்த காவலர்- புகார் அளித்த உரிமையாளர்
கேரளாவில் பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்தக்கூடாது எனக்கூறி காவலர் அத்துமீறி காருக்குள் அமர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம் அருகே பிரசாத் என்பவர் காரை நிறுத்திவிட்டு தனது பெற்றோருக்காக காத்திருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர், வாகனத்தை அங்கு நிறுத்தக்கூடாது என தெரிவித்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காரின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்ட உதவி ஆய்வாளர் காரின் உரிமையாளர்,இளைஞரின் பெற்றோர் என அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து உதவி ஆய்வாளர் மீது இளைஞர் முதலமைச்சர் மற்றும் கேரளா டிஜிபிக்கு புகார் அளித்துள்ளார்.
