இணையம் முழுக்க வேகமாக பரவும் இந்திய விமானப்படை வெளியிட்ட வீடியோ

x

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் மேகவெடிப்பு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்திய விமானப்படை சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை ஹெலிகாப்டர் மூலம் வழங்கிய வீடியோவை இந்திய விமானப்படை வெளியிட்டு உள்ளது. மேகவெடிப்பால் பாதித்த ஜம்மு போன்ற பகுதிகளில் கடந்த 2 நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 206 பேர் மீட்கப்பட்டு இருப்பதாகவும், 500 கிலோ அத்தியாவசிய பொருட்களும், 6 ஆயிரத்து எழுநூற்று 50 கிலோ நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய விமான படை வெளியிட்ட இதுகுறித்து வெளியிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்