கூகிள் மேப்பை பார்த்து போனவருக்கு நடந்த சங்கட்டம்

x

"நம்பி போனேன்.. இப்படி தண்ணீல நெம்ப வச்சிட்டியே" - கூகிள் மேப்பை பார்த்து போனவருக்கு நடந்த சங்கட்டம்

கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து ஓடைக்குள் விழுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், கானா பகுதியில் கூகுள் மேப்பை பார்த்து செல்லம் என்பவர் கார் ஓட்டிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவர் செல்லும் சாலை குறுகலாக மாறி இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் நெறுக்கடியான சாலையாக மாறியபோதும், அவர் காரை ஓட்டியுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் சாலையோரமாக இருந்த ஓடையில் கார் விழுந்துள்ளது. அங்கு நல்ல மழை பெய்து வருவதால், ஓடையில் நிறம்பிய தண்ணீரில் கார் மூழ்கியுள்ளது. துரிதமாக செயல்பட்டு பயணிகள் வெளியே வந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்