இணையத்தை தெறிக்க விட்ட 'ச்சீ..ச்சீ...ரீ... நானி' பாடல்

இணையத்தை தெறிக்க விட்ட ச்சீ..ச்சீ...ரீ... நானி பாடல்
x

இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கடந்த சில நாட்களாக ட்ரெண்ட் ஆகிவரும் இந்தப் பாடலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மொழி புரியவில்லை என்றாலும், பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ச்சீ ச்சீ என தொடங்கும் இந்த ஒடியா மொழிப் பாடலுக்கு பலரும் நடனமாடி ரீல்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு காதல் தோல்வி பாடல் என்பது மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒடிசாவின் ‘பலிபுல்’ (Baliphul) என்ற ஆல்பத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலில்

நடித்தவர் பிபூதி பூஷன் பிஸ்வால். (Bibhuti Bhushan Biswal)

1995-ம் ஆண்டு எழுதப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு 2005-ம் ஆண்டு தான் இந்தப் பாடல் படமாக்கப்பட்டதாக சொல்லபப்டுகிறது.

இந்த பாடலில் நடித்தவர் ஒடியாவின் பிரபல நாடக நடிகர் பிபூதி பூஷன் பிஸ்வால். 2005 ஆம் ஆண்டு இந்தப் பாட்டு வெளியான போது கிடைத்த வெற்றியை விட தற்போது மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் பிபூதி பூஷன் பிஸ்வால் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து அவர் மீது மீடியா வெளிச்சம் பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் தனது பாடல் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேபோல், இத்தனை வருடங்கள் கழித்து இப்படியொரு புகழும் பேரும் கிடைத்திருப்பதை நம்பவே முடியவில்லை என்று பாடலில் ஹீரோயினாக நடித்த ஷைலஜா படேல் உருக்கத்துடன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்