"தந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை" டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மகன்

அரசு மருத்துவமனையில் தந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மருத்துவர் மீது மகன் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"தந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை" டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மகன்
Published on

"தந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை" டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மகன்

அரசு மருத்துவமனையில் தந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மருத்துவர் மீது மகன் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள விஜயபுரா அரசு மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மல்லிகார்ஜுனா என்பவர் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொரோனா வார்டில் பணியில் இருந்த பெண் மருத்துவர் பிரியதர்ஷினி, முதலுதவி சிகிச்சைகளை அளித்தும் மல்லிகார்ஜுனா உயிரிழந்தார். தன் தந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு முன்வைத்த மகன் திப்பசாமி, பணியில் இருந்த டாக்டர் பிரியதர்ஷினியை தாக்க தொடங்கினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com