தயங்கி தயங்கி நின்ற வீரர்கள்.. யோசிக்காமல் மட மடவென ஏறிய கலெக்டர்

x

கேரளாவில் கயிறு ஏறும் போட்டியில், மட மடவென கயிற்றில் ஏறி இளைஞர்களை ஆச்சரியப்படுத்திய, தமிழரான திருச்சூர் மாவட்ட ஆடிசியரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருச்சூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வரும் தமிழரான அர்ஜுன் பாண்டியன், சுறுசுறுப்பாக பணியாற்றி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் திருச்சூர் சைக்கிள் கிளப் சார்பில் நடைபெற்ற இளைஞர்களுக்கான போட்டியை துவக்கி வைத்தார். அப்போது கயிறு ஏறும் போட்டியில் கயிற்றில் ஏற விளையாட்டு வீரர்கள் தயங்கி நின்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டியன் மட மடவென கயிற்றில் ஏறி அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்