ஆன்லைனில் சான்ட்விச் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

x

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில், ஆன்லைனில் சாண்ட்விச் ஆர்டர் செய்தவருக்கு பிளாஸ்டிக் கையுறையும் சேர்ந்து வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். சதீஷ் சாரவாஹி என்ற வாடிக்கையாளர், zomato செயலியின் மூலம் ஒரு உணவகத்தில் இருந்து சாண்ட்விச் ஆர்டர் செய்துள்ளார். தனக்கு விநியோகிக்கப்பட்ட சாண்ட்விச்சை அவர் பிரித்து பார்த்தபோது, உடன் பிளாஸ்டிக் கையுறைகளும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து, zomato நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார். அதற்கு, இந்த உணவை விநியோகம் செய்த உணவகத்தின் பொறுப்பாளர்களிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று zomato கஸ்டமர் கேர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்