ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, படிப்பிற்காக தனது குடும்பத்தை பிரிந்து விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில், சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலை விடுதி அறையில் உள்ள கழிவறைக்கு சென்று அங்கிருந்த கிருமி நாசினி மருந்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து அவரது தோழியிடம் தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.