ஹூண்டாய் காரை ப்ரோமோட் செய்த நடிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஹூண்டாய் காரை ப்ரோமோட் செய்த ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு
ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களான
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கார் உற்பத்தியில் குறைபாடுகள் உள்ளதாக பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து, ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரத்பூர் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி, தவறான அல்லது குறைபாடு உள்ள பொருட்களை விளம்பரப்படுத்தினால், பிராண்ட் தூதர்களும் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் 6 பேர் மீதும் வழக்கு செய்யப்பட்டிருக்கிறது.
Next Story
