விற்பனையாளரை திசை திருப்பி ரூ.6 கோடி வைர நகைகள் திருட்டு

x

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள பிரபலமான நகை ஷோரூமில் விற்பனையாளரை திசை திருப்பி 6 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை திருட்டு கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் சென்ற 4 திருடர்கள்

அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து லக்னோவில் உள்ள கடைக்கு நகைகள் வாங்குவது போல் சென்று கொள்ளையடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 4 திருடர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வைர நகைகளை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்