ஹெலிகாப்டர் இறங்கிய அமைச்சர்கள்...அலறி ஓடிய மக்கள்
தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் அமைச்சர்கள் வந்திறங்கிய ஹெலிகாப்டரால், அரசு நலத்திட்ட விழாவிற்கான வரவேற்பு வளைவு காற்றில் பறந்து சரிந்து விழுந்தது. ஹெலிகாப்டர் தரை இறங்கிய போது பறந்த புழுதி அங்கிருந்த பொதுமக்களை ஓட்டம் பிடிக்க வைத்தது. அதிகாரிகளிடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்திற்கு வந்து சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
Next Story
