14 கேள்விகள் கேட்ட ஜனாதிபதி.. திருப்பி கேட்ட உச்ச நீதிமன்றம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் என்ன தீர்வு என உச்ச நீதிமன்றம் கேள்வி
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வைத்திருந்தால் என்ன தீர்வு? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தது குறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மீண்டும் விசாரித்தது.
மத்திய அரசின் வாதங்களைப் பரிசீலித்த நீதிபதிகள், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வைத்திருந்தால் என்ன தீர்வை நீதிமன்றம் காண முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
இவ்வாறு நிலுவையில் வைத்திருந்த மசோதாக்கள் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் என்னவாகும்? என்றும் கேட்டனர்.
அதற்கு, ஆளுநர், குடியரசுத் தலைவரின் பணியை நீதிமன்றம் எடுத்துக் கொள்ள முடியாது என அட்டார்னி ஜெனரல் பதில் அளித்தார்.
