நேற்று பிரதமர் அணிந்த தலைப்பாகையில் ஒளிந்திருந்த அரசியல் குறியீடு.. டிசம்பர்ல தான் விஷயமே இருக்காம்

x

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அணியும் விதவிதமான ஆடைகள், தலைப்பாகைகள் தனிக்கவனம் பெறும்...

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதத்தில், வித்தியாசமான கண்ணை கவரும் நிறங்களில் தலைப்பாகை அணிந்து வருவது அவரது வழக்கம்.

இதில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் விதத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில், வெள்ளை நிற தலைப்பாகையில் ஆங்காங்கே மூவண்ணத்திலான அடையாளங்களுடன் கூடிய தலைப்பாகை அணிந்து, தேசியக்கொடியை ஏற்றியது தனிக்கவனம் பெற்றது.

அந்த வகையில், இந்தாண்டு சுதந்திர தினத்தில் என்ன உடையில் வரவுள்ளார் என்பதை கேமரா வழியாக பலரும் காண ஆவல் கொண்டார்கள்... அவரது வருகை தென்பட்டதும், இணையத்தில் அவரது மேட்சிங்- மேட்சிங் ஆடை குறித்த படங்கள் பேசு பொருளானது.

வெள்ளை நிற குர்தா ஆடையில் வி நெக்கில் நீல நிற மேல்கோட் அணிந்து வீறு நடைபோட்டு வந்தார் பிரதமர் மோடி... மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் கொண்ட நீண்ட ராஜஸ்தானி ஸ்டைல் தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.... இப்போது அல்ல 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை தொடங்கியதிலிருந்து சுதந்திர தினவிழாவில் தனது ஆடையால் கவனம் பெற்று வருகிறார்.

இப்போது அவரது தலைப்பாகை குறித்து அரசியல் பேச்சும் இருக்கிறது... ஆம், ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்து இந்த தலைப்பாகையை அணிந்தாரா என்ற கேள்வியெல்லாம் எழுப்பப்படுகிறது. எது என்னவோ... வழக்கம்போல் பிரதமர் மோடி இம்முறையும் தனது நேர்த்தியான ஆடையால், பார்வையாளர்களை ஈர்த்துவிட்டார்.

தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி, செங்கோட்டையில் அதிகமுறை தேசிய கொடியை ஏற்றிய பிரதமர்கள் பட்டியலில் 3 ஆவது இடம் பிடித்துள்ளார். நாட்டில் அதிக முறையாக முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 முறை செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி இருக்கிறார். அவரது மகள் இந்திரா காந்தி 16 முறையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 முறையும் தேசிய கொடியை ஏற்றி இருக்கின்றனர். இப்போது மன்மோகன் சிங் சாதனையை பிரதமர் மோடி சமன் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்