"நாட்டை உலுக்கிய விமான விபத்து - இறுதி அறிக்கையில் தான் உண்மை?"
"நாட்டை உலுக்கிய விமான விபத்து - இறுதி அறிக்கையில் தான் உண்மை?"
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், இறுதி அறிக்கை கிடைத்ததும் விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வந்திருப்பது முதற்கட்ட அறிக்கையே என்றும், அதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு ஏஏஐபி-க்கு AAIB தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும், இறுதி அறிக்கையை விரைவில் எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என்றும், ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
நம்மிடம் உலகிலேயே சிறந்த விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளதாகவும், விமானத்துறையின் முதுகெலும்பே அவர்கள் தான் என்றும், மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
