நேரம் ஆக ஆக அச்சத்தில் உறையும் கேரள மக்கள்

x

கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட லைபீரிய நாட்டுக் கப்பலான எம் எஸ் சி எல்சா 3 சரக்கு கப்பல் கொச்சி அருகே 38 கடல் மைல் தூரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் 460 கண்டெய்னர்கள் இருந்த நிலையில், ஏராளமான கண்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தது. இந்த கண்டெய்னர்கள் கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம், வர்க்கலா உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளில் ஒதுங்கி வருகின்றன. ஒதுங்கும் கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு போன்ற அபாயகரமான எரிபொருள் திரவம் இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்