Online Game அடிமைத்தனம் | 19 வயது சிறுவனுக்கு நேர்ந்த ஆபத்து | பெற்றோர்களே உஷார்

x

முன்பெல்லாம் வார இறுதி நாட்களில் பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் வெளியே சென்று விளையாடுவது வாடிக்கையாக இருந்து வந்த நிலையில், தற்போது விளையாட்டு என்றாலே செல்போன்களிலும், கணினிகளிலும் அடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் இணைய விளையாட்டுகளில் மூழ்கி, அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். உலகம் முழுவதுமே வீடியோ கேமிற்கு அடிமையான குழந்தைகள் பற்றிய கவலைத்தரக்கூடிய சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு (WHO) வீடியோ கேமுக்கு அடிமையாவதை அதிகாரப்பூர்வ மனநலக் கோளாறாக அறிவித்திருக்கிறது. அதேபோல் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வில், ஆன்லைன் விளையாட்டை அதிகமாக பயன்படுத்தும் நபர்களின் கைகளில் மன அழுத்தம் காரணமாக மீண்டும், மீண்டும் காயங்கள் ஏற்படுவதாகவும், இது அவர்களை பலவீனமானவர்களாக மாற்றி நிரந்தர காயத்திற்கு வழிவகுக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது எல்லா வீடுகளிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படுகிறது, தன் பெற்றோரின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டு விளையாடுவது அதிகரித்துள்ளது. பெற்றோரும் குழந்தைகள் வீட்டில் அமைதியாக இருக்கிறார்கள் என்று இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இதனால் குழந்தைகள் அதிகம் விளையாடும்போது மனநலம் கூட பாதிக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.

ஆன்லைன் கேம் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை மீண்டும் ஒரு சம்பவம் நிரூபித்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த ஒரு டீனேஜ் சிறுவனுக்கு முதுகெலும்புல அறுவை சிகிச்சையே செய்யப்பட்டிருக்கிறது.

19 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி கேமிங் அடிமைத்தனத்தால் பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறான்.அவருக்கு முதுகுத்தண்டு வளைந்து, சிறுநீர்ப்பையின் மீதான BALANCE இழக்கத் தொடங்கியது. இது முதுகுத் தண்டு அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறியாகும்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தில், spinal TB காரணமாக அவரது நிலை மோசமடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் நடக்கவும், சிறுநீர் கழிக்கவும் கூட சிரமப்பட்டார்.kypho-scoliosis எனப்படும் ஆபத்தான நிலை. இது முதுகெலும்பு முன்னோக்கியும், பக்கவாட்டிலும் வளைந்து காணப்பட்டது.

ஸ்கேன்களில் அவரது இரண்டு முதுகெலும்பு எலும்புகளில் (D11 D12) காசநோய் தொற்றியிருந்தது தெரியவந்தது, இதனால் சீழ் உருவாகி அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருந்தது.அறுவை சிகிச்சை நிபுணர்கள் திருகுகளை வைத்து முதுகெலும்பை சீரமைத்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அந்த சிறுவன் உடல்நிலை தேறிவருகிறான். மீண்டும் நடக்கத் தொடங்கிவிட்டான்.

சிறுவனின் உடலை வலுப்படுத்த பிசியோதெரபி சிகிச்சையும்அவனது விளையாட்டு அடிமைத்தனத்தை போக்குவதற்கு ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிறுவன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய, அவர் குணமடைவது உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. விளையாட்டு அடிமைத்தனம் மிகமிக ஆபத்தானது என்பது டெல்லி சிறுவனுக்கு நேர்ந்த நிலை உணர்த்துகிறது.


Next Story

மேலும் செய்திகள்