முன்னணி டைல்ஸ் நிறுவனமான கஜாரியாவின் புதிய விளம்பரம்
இந்தியாவின் முன்னணி டைல்ஸ் மற்றும் குளியலறைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Kajaria Ceramics, "மக்கள்தான் கேட்பார்கள்" என்ற தலைப்பில் புதிய விளம்பரப் பிரசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர்.
தனித்துவமான வீட்டு வடிவமைப்பு, உயர்தர டைல்ஸ் மற்றும் குளியலறைப் பொருட்கள் கஜாரியாவின் சிறப்பு அம்சமாகவும், புதிய விளம்பரத்தில் ஒரு தம்பதி அழகிய வீட்டில் விருந்தினர்களை வரவேற்கும் கதை மூலம், கஜாரியாவின் பிரீமியம் தயாரிப்புகள் எளிதில் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரசாரம் மூலம், மக்களின் விருப்பம் மற்றும் பிராண்ட் நம்பகத்தன்மையை அதிகரிப்பதோடு, முன்னணி பிராண்டாக தங்களை நிலைநிறுத்தி வருவதாக Kajaria Ceramics நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
