தன் 9 மாத குழந்தையை விற்று தாய் போட்ட மெகா பிளான்... விட்டு வைக்காமல் தண்டித்த கர்மா
கேரளாவில் 9 மாத பச்சிளம் குழந்தை, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தனா என்ற பெண் தனது இரண்டாவது கணவர் சிவாவுடன் சேர்ந்து கேரளாவை சேர்ந்த ஆதி லட்சுமி என்பவருக்கு தனது 9 மாத குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக கேரள போலீசார் நடத்திய விசாரணையில்,கீர்த்தனா தனது முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை விற்று விட்டு இரண்டாவது கணவருடன் வாழ திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளிடம் ஓப்படைத்த போலீசார், தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
