முதலையை சிலை என நினைத்தவருக்கு நேர்ந்த விபரீதம்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலையை சிலை என்று நினைத்தவர் முதலை கடிக்கு ஆளான அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது... Zamboanga Sibugay மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஆபத்தை அறியாமல் ஒருவர் வேலி மீது ஏறியுள்ளார். வெடுக்கென அவரைக் கவ்விய முதலை தரதரவென நீருக்குள் இழுத்துச் சென்று மரண பயத்தைக் காண்பித்தது... நல்வாய்ப்பாக உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் முதலையிடம் இருந்து அந்த இளைஞரைக் காப்பாற்றினார். படுகாயம் அடைந்த இளைஞருக்கு 50க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டன. முதலில் முதலையைக் கண்டதும் அது வெறும் சிலை என நினைத்ததால் அந்த இளைஞர் இவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
