Marrigae Fight Viral Video | இரண்டு அணியாக பிரிந்து `போர்’ நடத்திய மாப்பிள்ளை, பெண் வீட்டார்

இரண்டு அணியாக பிரிந்து `போர்’ நடத்திய மாப்பிள்ளை, பெண்

Marrigae Fight Viral Video | இரண்டு அணியாக பிரிந்து `போர்’ நடத்திய மாப்பிள்ளை, பெண் வீட்டார் #marriage #appalam #viralvideo #kerala கேரளாவில் திருமண விருந்தில் அப்பளம் கிடைக்காததால் தகராறு - அடிதடி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருமண விருந்தின் போது அப்பளம் கிடைக்காததால் உருவான தகராறு அடிதடியில் முடிந்தது விருந்துகளின் போது புரோட்டாவுக்கும் சாம்பாருக்கும் அடிதடி நடைபெற்ற நாட்கள் உண்டு. தற்போது அப்பளத்திற்காக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற திருமண விருந்தின்போது உணவுப் பதார்த்தங்கள் வழங்கி கொண்டிருந்தபோது அப்பளமும் வழங்கப்பட்டது. ஆனால், ஒருவருக்கு அப்பளம் வழங்காததால் ஏற்பட்ட வாய் தகராறு, பெரிதாகி மணமகன் உறவினர்களும் மணமகள் உறவினர்களும் கும்பலாக மோதிக் கொள்ளும் நிலைக்கு மாறியது. இதனால், திருமண விருந்து அடிதடி விருந்தாக மாறிய நிலையில், இரு காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் விரைந்து சென்று தலையிட்டனர். இரு தரப்பிலிருந்தும் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டாலும் இரு தரப்பினரும் புகார் அளிக்க முன்வராததால் போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியாமல் திரும்பச் சென்றனர். நருவாமூடு, மாரநல்லூர் ஆகிய இரு காவல் நிலையங்களின் எல்லை பகுதியான நீரமண்கரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால், இரு காவல் நிலைய போலீசாரும் விரைந்து சென்றிருந்தனர். அப்பளத்திற்காக திருமண விருந்தின் போது நடைபெற்ற அடிதடி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com