"மீனவர் சமூக மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்" - புதுச்சேரி முதல்வர்

x

புதுச்சேரியில் மீனவ சமுதாய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரங்கசாமி, மீனவர் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார். மீனவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்