சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி

x

மண்டல பூஜையையொட்டி, ஆறன்முளா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலமாக புறப்பட்டது. மண்டல பூஜை வரும் 27-ஆம் தேதி காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 26-ஆம் தேதி மாலையில் சபரிமலையை தங்க அங்கி ஊா்வலம் வந்தடையும். பின்னர், சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படும். திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தங்க அங்கி, சுமாா் 420 பவுன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்