2016-ல் காணாமல் போன இளம்பெண் : தெலங்கானா போலீசார் உருவாக்கிய செயலியால் கண்டுபிடிப்பு

ஐதராபாத் போலீசார் உருவாக்கியுள்ள தொழில் நுட்ப வசதியால், காணாமல் போன அசாமை சேர்ந்த 16 வயதான இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்.
2016-ல் காணாமல் போன இளம்பெண் : தெலங்கானா போலீசார் உருவாக்கிய செயலியால் கண்டுபிடிப்பு
Published on

ஐதராபாத் போலீசார் உருவாக்கியுள்ள தொழில் நுட்ப வசதியால், காணாமல் போன அசாமை சேர்ந்த 16 வயதான இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த அஞ்சலி டிக்கா தனது பெற்றோருடன் டெல்லிக்கு வேலைக்காக வந்துள்ளார். கடந்த 2016ல் அசாம் சென்ற அஞ்சலி, சொந்திப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் அவர் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் அஞ்சலியை தேடி வந்த நிலையில், ஐதராபாத் போலீசார் உருவாக்கியுள்ள செயலி மூலம் அஞ்சலி, தேஷ்பூர் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோருக்கு அஞ்சலி இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெலங்கானா மகளிர் பாதுகாப்பு டி.ஜி.பி. சுவாதி லக்ரா தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com