கண்ணிமைக்கும் நொடியில் களமிறங்கிய கும்பல்..கத்தி முனையில் செய்த பயங்கரம்..வெளியான CCTV காட்சி

பெங்களூர் டி.ஜே.ஹல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில், நள்ளிரவு நேரத்தில் வீச்சரிவாளுடன் நுழைந்த 2 பேர், மதுக்கடையில் இருந்த ஊழியர்களை முனையில் மிரட்டி, கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்ட போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com