கந்து வட்டிக் கொடுமை-விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை

x

புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு நெஞ்சை உருக்கும் வேண்டுகோளோடு தவெக உறுப்பினர் அடையாள அட்டையுடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி,நெல்லிதோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விக்ரம் என்கிற விக்ரமன்(34), இவருக்கு திருமணம் ஆகி மேரி என்ற மனைவியும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். டாட்டா ஏசி சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வரும் விக்ரமன் ஏற்கனவே கடன் தொல்லையால் கோவிந்த சாலையில் உள்ள தனது சொந்த வீட்டை காலி செய்துவிட்டு பிள்ளையார் கோவில் வீதிக்கு வாடகைக்கு குடியேறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விக்ரமன் வீட்டில் யாரும் இல்லாததால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற அவரது மனைவி மேரி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது விக்ரமின் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்ரமணியம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்