குப்பை லாரியில் கிடந்த சடலம் - வினையில் முடிந்த `LIVE IN RELATIONSHIP'
போதையில் லிவ் இன் பாட்னரான பெண்ணை கொலை செய்து, சடலத்தை மாநகராட்சியின் குப்பை லாரியில் வீசியுள்ள சம்பவம் பெங்களூருவில் அரனேறியுள்ளது.
நகரின் சி.கே.அச்சுகட்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி குப்பை வாகனத்தில் இருந்து பூட் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தின் கழுத்தும் கைகளும் கட்டப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்தது ஆஷா என்ற 40 வயது பெண் என அடையாளம் காணப்பட்டார்.
அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஒரு சந்தேகிக்குரிய ஆட்டோவின் ஆதாரம் கிடைத்தது. விசாரணையில், ஆஷாவுடன் ஷம்ஷுதீன் என்பவர் கடந்த ஒன்றரை வருடமாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இன்னிலையில் இரவு மது அருந்தும் போது எற்ப்ட்ட தகராறில் கோபத்தில் ஷம்ஷுதீன் ஆஷாவை கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும், பின்னர் சடலத்தை BBMP குப்பை வண்டியில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது ஷம்ஷூதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
