நாடே பேசிய 90 டிகிரி பாலம் - கட்டிய 7 இன்ஜினியர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு

x

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் சர்ச்சைக்குரிய பாலம் கட்டப்பட்ட விவகாரத்தில், 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போபாலில், 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட பாலம் குறித்த புகைப்படங்கள் வெளியாகின. இது விபத்துக்கு வழிவகுக்கும் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், அப்பாலத்தை கட்டிய பொதுப்பணித்துறையை சேர்ந்த 7 பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்து, மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தவறான வடிவமைப்பிற்கு காரணமான கட்டுமான நிறுவனம் மற்றும் வடிவமைப்பு ஆலோசகரை, அம்மாநில அரசு கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்