"கோவா நைட் கிளப்பில் 25 பேர் பலியானது வெறும் விபத்து அல்ல.." - ராகுல் காந்தி
கோவாவில் நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியான சம்பவம் வெறும் விபத்து அல்ல, அரசின் நிர்வாகத்திறனின் தோல்வி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் உயிரிழந்தவர்களின் குடுமப்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். வெளிப்படையான விசாரணை நடத்தி, வரும் காலங்களில் இதுபோன்ற துயர நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Next Story
