படுக்கை கார்... காதலியின் விருப்பத்தை நிறைவேற்றிய இளைஞர்
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த இளைஞர், தனது காதலியின் விருப்பத்திற்கேற்ப படுக்கை வசதியுடன் கூடிய காரை உருவாக்கி சாலையில் வலம் வந்தார். பஞ்சுமெத்தையுடன் சாலையில் சென்ற இந்த காரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, அந்த வாகனத்தை சாலையில் கொண்டு செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.
Next Story
