கடந்த மாதம் பறிபோன 3 அப்பாவிகளின் உயிர்-மீண்டும் கிளம்பிய அபாயம்-முக்கிய சாலையில் வெடித்த போராட்டம்

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புது நகரில் கடந்த மாதம் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் புது நகர், கம்பன், மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் மீண்டும் விஷவாயு வெளியேறியதாக கூறி, அப்பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், புதுச்சேரி- விழுப்புரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை, புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com