ஜாமினில் வந்து ஷூட்டிங்கில் நடித்த பிரபல நடிகர்

x

9 மாதங்களுக்கு பிறகு கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த தர்ஷன், முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில், தி டெவில் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியதையடுத்து, சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட தர்ஷன், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். வரும்14-ம் தேதி வரை மைசூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், தர்ஷனின் பாதுகாப்புக்காக 10 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்