"சாமானிய மக்களின் குரலை பிரதிபலிக்கும் தந்தி டிவி" - பவன் கல்யாண் புகழாரம்
14வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தந்தி டிவிக்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஊடக துறையில் நிலையாகவும், பொறுப்பாகவும் தந்தி டிவி செயல்படுவதாக புகழாரம் சூட்டியுள்ள பவன் கல்யாண், சாமானிய மக்களின் குரலை தந்தி டிவி பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார். சமூக பொறுப்புணர்வு, பண்பாடு, தேசிய ஒருமைபாடு ஆகியவற்றை தந்தி டிவி உயர்த்தி பிடிப்பதாக பாராட்டியுள்ள பவன் கல்யாண், நாட்டு மக்களின் நலனுக்காகவும், ஜனநாயக பண்புகளை காக்கவும் தந்தி டிவி தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
Next Story
