Terrorist? | Uttarpradesh | உபியில் ISIS? - ``இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரும் சதித்திட்டம்’’

``இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரும் சதித்திட்டம்’’

உபியில் ISIS? - ``இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரும் சதித்திட்டம்’’

டெல்லி காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர், உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் பகுதியில் வைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ரிஸ்வான் என்பவரை அதிரடியாகக் கைது செய்தனர். நீண்ட நாட்களாகக் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த இவர், முன்னதாக மும்பையிலும் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்து தேச விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கலாம் என்ற கோணத்தில், டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com