பயங்கரவாத தாக்குதல் எதிரொலி - காஷ்மீர் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி காரணமாக வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இங்கு நாளொன்றுக்கு 30 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவது வழக்கம் என்ற நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 12 முதல் 15 ஆயிரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் அறைகளின் முன்பதிவு சுமார் 70 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள பல தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்
Next Story
