மீண்டும் பயங்கரம் - மண்ணில் புதைந்த உயிர்கள்.. தரைமட்டமான வீடுகள்..

x

சாமோலியில் மேகவெடிப்பால் வெள்ளம்...பல வீடுகள் சேதம்

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில், மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

சாமோலியில் உள்ள தாராலி பகுதியில் இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் இடிபாடுகள் குவிந்துள்ளன. இச்சம்பவத்தில் 20 வயது இளம் பெண் உயிரிழந்ததாகவும், ஜோஷி என்ற நபர் மாயமானதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உத்தரகாசி மாவட்டத்தில் தொடர் மழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சயனாசட்டி Syanachatti ஏரியை துார்வார மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் நீர்மட்டம் குறைந்து பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்