பயங்கர தீ விபத்து - 2 குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

x

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் (Solapur) ஆடை உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

அகால்கோட் சாலையில் (Akkalkot Road) இயங்கி வந்த எம்ஐடிசி தொழிற்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரம் போராடி தீயணை அணைத்தனர். மின்கசிவு காரணமாக ஜ வுளி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்