தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் இரட்டைக் கொலை - அதிர்ச்சி
தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் இரட்டைக் கொலை - அதிர்ச்சி
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு திருச்சானூர் சாலையில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. திருமணத்திற்கு வந்த சுனில் என்பவருக்கும் உறவினர்களுக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த சுனில் முனிரத்தினம், மணிகண்டா ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த முனிரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,
சுனில் மற்றும் மேலும் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
