காரில் மது அருந்திய தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் மூச்சுத்திணறி பலி
திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றிய 2 பேர் காரில் மது அருந்திவிட்டு உறங்கிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். திருச்சானூரை சேர்ந்த திலீப் மற்றும் வினய் ஆகிய இருவரும் காரில் ஏ.சி. போட்டு மது அருந்தியுள்ளனர். மேலும் தாங்கள் மது அருந்துவது யாருக்கும் தெரியக்கூடாது என கார் மீது தார்ப்பாயை போட்டுள்ளனர். மது அருந்திவிட்டு இருவரும் உறங்கிய நிலையில் காரில் ஏ.சி. நின்றுபோனதால் இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தொடர்ந்து இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
