

தெலுங்கு திரையுலக போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து, அமலாக்கப்பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் அமலாக்கப்பிரிவு விசாரித்திருக்கும் நிலையில், இவ்வழக்கின் பின்னணியை விவரிக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ஐதராபாத்தில் கலால்த்துறையிடம் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று சிக்கியது. அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களுடைய செல்போன் தரவுகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது. இந்த கும்பல் மூலம் ஐதராபாத்தில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளையாகியிருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வழக்குப்பதிவு செய்த தெலுங்கானா காவல்துறை, சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து விசாரித்தது.