தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங். மோதல் : போலீசார், பொதுமக்கள் பலர் காயம்

துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலையாததால் பரபரப்பு
தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங். மோதல் : போலீசார், பொதுமக்கள் பலர் காயம்
Published on
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்திராலயம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தி கலைக்கப்பட்டனர். இரு தரப்பினரும், ஒரே பகுதியில் வாக்கு சேகரித்தபோது, கலவரம் வெடித்தது. போலீசார் காயமடைந்த நிலையில்,கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். துப்பாக்கியால் வானத்தில் சுட்டு மிரட்டியும் அவர்கள் கலையவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
X

Thanthi TV
www.thanthitv.com