

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தெலுங்கு நடிகரை போலீசார் கைதுசெய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஹரி மீது செம்மரக்கட்டத்தல் தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், திருப்பதி நீதிமன்றத்தில் சரணடைய வந்த ஹரியை போலீசார் கைது செய்தனர்.