சுரங்கத்தில் துடிக்கும் 8 உயிர்கள் 3-வது நாள் மீட்புப் பணியில் புதிய முயற்சி

x

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் கட்டுமானப் பணியின்போது சுரங்கப்பாதையின் கூரை இடிந்து விழுந்தது. விபத்தில் சிக்கியவர்களின் நிலை குறித்து தகவல் வெளியாகாத நிலையில், எண்டோஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் கேமரா கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் சுரங்க விபத்து மீட்புப் பணியிலும் இதே முறை கையாளப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், பேரிடர் மீட்புப் படைக்குச் சொந்தமான மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்