

பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கொலையில் நீதி வேண்டும் என கோரி கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்டிகரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், ப்ரியங்கா ரெட்டி கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தினர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவர்கள், ப்ரியங்கா ரெட்டியின் உருவப் படம் உள்ளிட்ட பதாகைகளுடன் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைதாராபாத் ஒஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலைகாரர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தினர்.
ப்ரியங்கா ரெட்டியின் கொலையைக் கண்டித்து ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் ஏ.ஐ.டி.எஸ்.ஓ. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குமாறு முழக்கம் எழுப்பினர்.
பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கொலையை கண்டித்து, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சமாஜ்வாதி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஹைதராபாத் நீதிமன்றம் முன்பு ப்ரியங்கா ரெட்டியின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வழக்கறிஞர்கள், கொலையாளிகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.