

தெலங்கானாவில் கூலிப்படை மூலம் , மகளின் கணவரை கவுரவ கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி பீஹாரில் பிடிபட்டுள்ளான். நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடா என்ற இடத்தில் கடந்த 14 ம் தேதி, பட்டப்பகலில், பிரனாய் நாயக் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ் என்பவர் தனது மகள் அமிர்தவர்ஷினியின் கணவரான பிரனாய் நாயக்கை ஒரு கோடி ரூபாய் கொடுத்து, கூலிப்படை மூலம் படுகொலை செய்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கவுரவ கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான சர்மா என்பவன், பீஹாரில் பிடிபட்டுள்ளதாக தெலங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.