தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

தெலங்கானாவில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக ​விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
Published on

கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு, தெலங்கானா மாநிலம் சைபராபாத் காவல் ஆணையர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரையும், கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில், போலீசாரை தாக்கிவிட்டுதப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த என்கவுன்ட்டர் தொர்பாக விசாரணை நடத்தக் கோரி புகார்கள் வரப் பெற்ற நிலையில், சைபராபாத் போலீசாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த என்கவுன்ட்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க தெலங்கானா மாநில அரசு, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது. ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம். பகவத் அதன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com