மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழில் அதிபர் தற்கொலை

தெலுங்கானாவில் மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழில் அதிபர் தற்கொலை செய்துக் கொண்டார்.
மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழில் அதிபர் தற்கொலை
Published on
நலகொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவை சேர்ந்த தொழிலதிபர் மாருதிராவ் மகள் அமிர்தா, கடந்த 2018-ம் ஆண்டு, பிரனய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத மாருதிராவ், கூலிப்படையை வைத்து, பிரனய்யை பட்டப்பகலில் கொலை செய்தார். இந்த காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறையில் இருந்த மாருதிராவ், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த தகவல்களை வெளியிட வில்லை. இதனிடையே, மருமகனை கொலை செய்து விட்டோமே என்ற வருத்தத்தில், தனது தந்தை தற்கொலை செய்து இருக்கலாம் என, அமிர்தா கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com