25 ஆண்டுகளை நிறைவு செய்த தேஜஸ் போர் விமான திட்டம்
இந்தியாவின் தேஜஸ் திட்டத்தின் 25 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் வகையில், ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி பெங்களூருவில் இரண்டு நாள் தேசிய செமினாரை நடத்துகிறது.
இந்த செமினாரில், தேஜஸ் திட்டத்தின் சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள்
மேலும் 2047ஆம் ஆண்டை நோக்கி இந்திய விமானத் துறையின் எதிர்கால பாதை குறித்த திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இந்திய விமானப்படை, தேஜஸ் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உதவிய அனைத்து இந்திய விமானப்படை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
அதோடு, வானமே எல்லை என்ற நம்பிக்கையுடன், இந்தியாவின் சொந்த விமானத் தொழில்நுட்பமான 'தேஜஸ்' தொடர்ந்து புதிய உயரங்களை எட்டும் என குறிப்பிட்டுள்ளது
Next Story
