பைக்கில் சென்ற டீச்சரை காரில் வந்து மோதிய மாணவர்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி
பைக்கில் சென்ற டீச்சரை காரில் வந்து மோதிய மாணவர்கள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி.. பின்னணி என்ன?
ஹரியானா அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியர் மீது, கார் ஒன்று வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியானா மாநிலம் சோனிபத் பகுதியில் உள்ள சாலையில் பெண் ஆசிரியை ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் ஓட்டி வந்த கார் ஒன்று, வேகமாக திரும்பியதில் ஆசிரியர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பெண் ஆசிரியர் சாலையின் முன்புறமாக கீழே விழுந்தார்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த மாணவர்கள், வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
