டவ்-தே புயல் தாக்கம் எதிரொலி - மும்பை மற்றும் கடலோர பகுதிகளில் பாதிப்பு

குஜராத்தின் மஹூவா பகுதியில் டவ்தே புயல் நள்ளிரவில் கரையை கடந்தது.
டவ்-தே புயல் தாக்கம் எதிரொலி - மும்பை மற்றும் கடலோர பகுதிகளில் பாதிப்பு
Published on

குஜராத்தின் மஹூவா பகுதியில் டவ்தே புயல் நள்ளிரவில் கரையை கடந்தது.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயலால் கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் புயலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. புயலுக்கு 6 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்த நிலையிலும், மழை மற்றும் சூறைக்காற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு, விழிப்புடன் நிவாரண பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் புயலின் தாக்கத்தால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு மின்தடை ஏற்பட அனுமதிக்கப்படவில்லை எனவும், மாற்று விநியோக ஏற்பாடுகள் திறமையாக நடப்பதாகவும், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com